உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா: ஜன., 13ல் கோலாகல துவக்கம்

கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா: ஜன., 13ல் கோலாகல துவக்கம்

நாமக்கல்: காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூசத் தேர்த்திருவிழா, ஜனவரி, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில், பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா, ஜனவரி, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று பகல், 1 மணிக்கு அபிஷேகம், மாலை, 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி, மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 14 மற்றும், 15ம் தேதி, பகல், 1 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஜனவரி, 16ம் தேதி, பகல், 1 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 10.30 மணிக்கு, திருக்கல்யாண வைபவம், ஸ்வாமி திருத்தேருக்கு புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. 17ம் தேதி காலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18ம் தேதி, இரவு, 7 மணிக்கு, முத்துப்பல்லக்கில், ஸ்வாமி திருவீதி உலா வருகிறார். 19ம் தேதி, இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருகிறார். அதிகாலை, 2 மணிக்கு, சத்தாபரண மகாமேரு, சிறப்பு வாணவேடிக்கை நடக்கிறது. 20ம் தேதி, இரவு, 7 மணிக்கு வசந்த விழா நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செல்வகுமார், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், நிர்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !