பழநியில் தைப்பூச விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :4305 days ago
பழநி: பழநி, தைப்பூச விழா, பெரிய நாயகியம்மன் கோயிலில், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில், நாளை காலை, 10:30 மணிக்கு, தைப்பூச விழாவை முன்னிட்டு, பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் ஆறாம் நாள், ஜனவரி, 16ம் தேதி, ஸ்கந்த ஹோமத்துடன், மாலை, 6.30 மணிக்கு மேல், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை, திருக்கல்யாணம் நடைபெறும். இரவு, 8.30 மணிக்கு, வெள்ளி ரதத்தில், சுவாமி திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவின் ஏழாம் நாள், ஜனவரி, 17 ம் தேதி, தைப்பூசத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அதிகாலை 4:00 மணிக்கு, சன்னதி திறக்கப்படும். மாலை, 4.45 மணிக்கு, தேரடி தேர்நிலையில் இருந்து தேரோட்டம் நடைபெறும். விழா நிறைவு நாளான, ஜனவரி, 20ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது.