உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு!

சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு!

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஜன.,1 ம் தேதி துவங்கிய பகல் பத்து உற்சவம், இன்று (ஜன.,10ம் தேதி) மாலை 4 மணிக்கு மோகினி அவதாரத்துடன் நிறைவடைகிறது. நாளை காலை 4 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், காலை 5 மணிக்கு "பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 6 மணிக்கு பெருமாள் ஏகாதசி மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பத்து நாட்கள் ராப்பத்து உற்சவ விழா நடைபெறுகிறது. இதே போல் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலிலும் விழா நடைபெறுகிறது.

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதர் பெருமாள் சுவாமி கோயில் 108 வைணவ சேஷத்ரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாஸாசனம் செய்யப்பெற்றதாகும். இங்கு வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு நாளை காலை 10.30 மணிக்கு பெருமாள் சுவாமி சயனத்திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு விஸ்வரூப சேவை, இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், பேஸ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !