கோயிலில் பாவை விழா
ADDED :4321 days ago
ரெட்டியார்சத்திரம்:கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், பாவை விழா நடந்தது. கோயில் செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ராஜேந்திரன், கோபிநாத் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ரெங்கசாமி, கருணாநிதி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். எல்லைப்பட்டி, தாதன்கோட்டை, ரெங்கப்பநாயக்கனூர், முத்துராம்பட்டி, தோப்புப்பட்டி, வேலம்பட்டி, கே.புதுக்கோட்டை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தனர். ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜ்மோகன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பசும்பொன் உட்பட பலர் பங்கேற்றனர்.