உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை: பக்தர்கள் தரிசிப்பு!

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை: பக்தர்கள் தரிசிப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் மூடிகிடந்த ராமலிங்க பிரதிஷ்டை கண்காட்சியகம், தினமலர் செய்தி எதிரொலியால் புதுப்பிக்கப்பட்டு, தற்போது பக்தர்கள் தரிசிக்க திறக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமாயண வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ராமர், சீதை ராமலிங்க (சிவலிங்கம்) பிரதிஷ்டை செய்து, பூஜை செய்வது போலவும், அதனை சுற்றி லட்சுமணர், அனுமன், நாரதர், வானர சேனைகள் படை சூழ நின்று வணங்குவது போல், தத்ரூபமாக சிற்பங்கள் வடிவமைத்து, பக்தர்கள் தரிசிக்க கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைத்து இருந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக, கண்காட்சி கூடத்தை பராமரிக்காததால் சிலைகள் சேதமடைந்து, தூசி படிந்து மூடியே கிடந்தது. இதனால் கோயில் வரலாறு அறிய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக, 11.11.13ல், தினமலரில் நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ரூ. 1.50 லட்சத்தில் ராமலிங்க பிரதிஷ்டை கண்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கோயில் குருக்கள் பூஜை, அபிஷேகம் செய்து கண்காட்சியகத்தை திறந்து வைத்தனர். பக்தர்கள் இலவசமாக கண்டுகளிக்க நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.  

பொங்கல் பண்டிகையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !