உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமாதா கோவிலில் இன்று பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு!

கோமாதா கோவிலில் இன்று பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு!

புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில், பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது. கருவடிக்குப்பம் ஓம் சக்தி நகரில் உள்ள, கோமாதா ஆலயத்தில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பசுக்களுக்கு காய்கறி, பழங்கள், அகத்திகீரை, பசும்புல் உள்ளிட்ட உணவுகளை அளித்து, உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு, இன்று (15ம் தேதி) மாலை 4.30 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா, கோ சம்ரக்ஷண எஜூகேஷனல் சேவா டிரஸ்ட் வேத சாம்ராட் ராஜா சாஸ்திரி செய்துள்ளார். விபரங்களுக்கு, 98423 29770 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !