மலைக்கோவிலில் நாளை திருவிளக்கு பூஜை!
திருப்பூர்: மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தைப்பூசத் தேர்திருவிழாவை ஒட்டி, நாளை (16ம் தேதி) திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள குழந்தைவேலாயுத சுவாமி கோவில் தைப்பூசத்தேர்திருவிழா வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. தேர்திருவிழாவை ஒட்டி, நாளை (16ம் தேதி) மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8.00 மணிக்கு யானை வாகன பவனி நடக்கிறது. தைப்பூசத்திருநாளான 17ம் தேதி காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிக்குள் ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமி, வள்ளி தெய்வானையுடன் ரதாரோஹணம் செய்கிறார். பகல் 3.00 மணிக்கு ரதம் கிரிவலம் வருகிறது. வரும் 18ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஸ்ரீதபோவனம் நிறுவனர் ஸ்ரீகுஹபிரியானந்த சரஸ்வதி, பூஜையை வழிநடத்தி அருளாசி வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு பஜனையும் இடம் பெறுகிறது. 19ம் தேதி காலை 11.00 மணிக்கு மகாதரிசனம், 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கம் நடக்கும். விழா இறுதி நாளான 20ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.