கோமாதாவிற்கு பூஜை
ADDED :4324 days ago
நெட்டப்பாக்கம்: மாட்டுப் பொங்கலையொட்டி, நல்லாத்தூர் சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் கோ பூஜை நடந்தது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள கோமாதாவிற்கு, காலை 10:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதையொட்டி, கோமாதா புஷ்பங்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.