உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்னிலம் முடிகொண்டானில் சம்வத்ஸ்ர மகோற்சவம்

நன்னிலம் முடிகொண்டானில் சம்வத்ஸ்ர மகோற்சவம்

திருவாரூர்: நன்னிலம் அருகே முடி கொண்டானில் ஸ்ரீமத் பாகவத ப்ரவசன மண்டப சம்வஸ்த்ர மகோற்சவம், ராதாகல்யாணம்,தெப்போற்சவம், சமஷ்ட்டி சப் தாக ஞானயக்ஞம் ஆகிய விழாக்கள் இன்று துவங்கியது இவ்விழா இம் மாதம் 25ம்தேதி வரை நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் கிராமத்தில் ஆலங்குடி சுவாமிகள் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆலங்குடி சுவ õமிகள் ஆராதனை சபா டிரஸ்ட் சார்பில் சம்வத்ஸ்ர மகோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. இங்குள்ள பாகவத ப்ரவசன மண்டபத்தின் ஏழாம் சம்வத்ஸர தினத்தை யெ õட்டி இன்று காலை கோ பூஜை, உஞ்சவிருத்தி பஜனை, ராதாகல்யாணம் ஆகிய நிகழ்ச்சி நடந்தது. மாலையில் ராதிகா ரமண வேணுகோபால சுவாமி வீதியுலா மற்றும் முடி கொண்டான் திருக்குளத்தில் தெப்போற்சவமும் நடக்கிறது. நாளை 18ம்தேதி நித்ய பூஜை, பாராயணம், இரவு கிருஷ்ண பிரேமிகள் சுவா மிகள் உபன்யாசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நாளை மறுநாள் 19ம்தேதி நித்ய பூஜை,பாராயணமும், 24ம்தேதி வரை ஸ்ரீகிருஷ்ண பிரேமிகள் சுவாமிகள் உபன்யாசம், திவ்ய நாம பஜனை,லோடோற்சவம் மற்றும் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ராதிகா,ரமணவேணுகோபால சுவாமிக்கு திருக் கல்யா ணம், தெப்போற்சவம்,பாகவத சமஷ்ட்டி ஸப்தாக ஞான யக்ஞம் மகோ த்சவம், கிருஷ்ண பிரேமி சுவாமிகள் உபன்யாசம் ஆகிய நிகழ்வுகள் நடக் கிறது.  ப்ரவசன மண்பம் ராதிகா ரமண வேணுகோபால சன்னதியில் நடக்கும் பார õயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 04366-230142 என்ற எண்ணில் ரகுப தி ஐயரை தொடர்பு கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் ஏ.சுந்தரம், நிர்வாக டிரஸ்ட்டி வி.த ண்டபாணி, பொருளாளர் எஸ்.சுவாமிநாதன், செயலர் எஸ்.சங்கரநாரா யண ன் உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !