உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் இன்று முதல் தங்கரத புறப்பாடு!

பழநியில் இன்று முதல் தங்கரத புறப்பாடு!

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்பட்ட, மலைகோயில் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு இன்று முதல் நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இதற்காக அன்று மாலை 5 மணி வரை, ரூ.2 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் தங்கரதம் இழுக்கின்றனர். எத்தனை பேர் தங்கரத புறப்பாட்டிற்கு காணிக்கை செலுத்தியிருந்தாலும், ஒரே ஒரு முறை தான் வெளிப்பிரகாரத்தில் சின்னக்குமாரசாமி உலா வருவார். தைப்பூச விழா, ஜன.11-ல் துவங்கி இன்று வரை நடக்கிறது. மலைகோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தால், ஜன.15 முதல் 19 வரை தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நிறுத்தப்பட்டது. இன்று முதல் வழக்கம் போல இரவு 7மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !