உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா பக்தர்கள் பாதயாத்திரை!

ஷீரடி சாய்பாபா பக்தர்கள் பாதயாத்திரை!

குமாரபாளையம்: ஆந்திரா மாநிலம், சித்தூரில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு, பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், நேற்று குமாரபாளையம் வந்தனர்.அவர்கள், ஷீரடி சாய்பாபா சிலையை அலங்கரித்து ரதத்தில் கொண்டு வந்தனர். ஆறு மாதம், பாதயாத்திரை சென்று சாய்பாபாவை தரிசனம் செய்த பின், அவர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர். குமாரபாளையம்- சேலம் சாலையில் வந்த பாதயாத்திரை குழுவினரை, அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !