உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி குளத்தில் படர்ந்துள்ள பாசியால் பக்தர்கள் முகம் சுளிப்பு

திருத்தணி குளத்தில் படர்ந்துள்ள பாசியால் பக்தர்கள் முகம் சுளிப்பு

திருத்தணி: முருகன் திருக்குளத்தில் படர்ந்த பாசியால், பக்தர்கள், புனித நீராட முகம் சுளிக்கின்றனர். திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகள் அருகே, சரவணப்பொய்கை என்கிற திருக்குளம் உள்ளது. இக்குளத்தில், பக்தர்கள் புனித நீராடிவிட்டு, பின்னர் மலைக்கோவிலுக்கு செல்வர். சில பக்தர்கள், திருக்குளத்தில் இறங்கி, கால், முகம் கழுவிய பின்பு தான் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில், குளத்தில் உள்ள தண்ணீர் பாசி படர்ந்து, பச்சை நிறமாக உள்ளது. இதனால்,பெரும்பாலான பக்தர்கள், குளத்தில் குளிப்பதற்கு முகம் சுளிக்கின்றனர். இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் புகழேந்தி கூறுகையில், பாசிகளை அவ்வப்போது, துப்புரவு தொழிலாளர்கள் மூலம் எடுத்து வருகிறோம். தற்போதுள்ள பாசிகளும், புடவை, வேட்டியால் அகற்றுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !