உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரதியார் பல்கலைக்கூடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா!

பாரதியார் பல்கலைக்கூடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா!

புதுச்சேரி:அரியாங்குப்பத்திலுள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில், தியாகராஜ சுவாமிகளின் 167வது ஆராதனை விழா நேற்று காலை நடந்தது. சபாநாயகர் சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பல்கலைக்கூடத்தின் உறுப்பினர்செயலர் சுப்ரமணியேஸ்வரராவ் முன்னிலை வகித்தார் துவக்க நிகழ்ச்சியாக, பொன்சண்முகம் தலைமையில் மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கூடத்தின் பேராசிரியர் பாலமுரளி, கோபக்குமார், சீனுவாசன், சத்தியமூர்த்தி, சிவக்குமார் கண்ணமங்கை, மகேஸ்வரி மற்றும் பல்கலைக் கூடத்தின் முன்னாள் மாணவர்கள் அங்கப்பன், முருகையன், மதுசூதனன், காயத்திரி ஆகியோர், பஞ்சரத்தின கீர்த்தனை இசைத்து, இசை அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கூட பேராசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !