ஐயா வைகுண்டசாமி கோயிலில் கலிவேட்டை
ADDED :4306 days ago
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டாம் நாள் விழாவான 24-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் முந்திரி கிணறு சமீபம் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு தலைமைகுரு பாலஜனாதிபதி தலைமை வகிக்கிறார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 25-ம் தேதி அய்யா அனுமார் வாகனத்தில்ங எழுந்தருளும் நிகழ்ச்சியும், 26-ம் தேதி இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 27-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.