வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா!
ADDED :4305 days ago
திருச்செந்தூர்: சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் நாளை (ஜன.25) மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து வீதி உலா வந்து, காலை மகர லக்னத்தில் கொடியேற்றப்படுகிறது.