உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையில் நிலா!

அமாவாசையில் நிலா!

தன் அடியவருக்காக அமாவாசை நாளில் அருள்புரிந்தவள் அபிராமி. மயிலாடுதுறை அருகிலுள்ள திருக்கடையூரில், அமிர்தகடேஸ் வரருடன் அபிராமி அருளாட்சி புரிகிறாள். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒருநாள், இங்கு வந்த போது அர்ச்சகரான சுப்பிரமணிய பட்டரிடம், இன்று என்ன திதி? எனக் கேட்டார். அபிராமி அன்னையை மனதில் தியானித்திருந்த பட்டர், ஏதோ நினைவில், பவுர்ணமி என பதிலளித்தார். ஆனால், அன்று அமாவாசை. பட்டர் சொன்னதை உண்மையாக்க அம்பிகை, இரவில் தன் காதணியான தாடங்கத்தை(தோடு) வானில் வீசி பவுர்ணமியாக்கினாள். பட்டருக்கும் அபிராமி பட்டர் என்ற சிறப்பு பெயர் உண்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !