பூதபுரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை!
ADDED :4301 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், பூதபுரீஸ்வரர் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை சிறப்பாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில், சவுந்தரவள்ளி தாயார் உடனுறை பூதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சவுந்தரவள்ளி தாயார், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.