உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சியில் பொட்டு, காலுக்கு மெட்டி ஏன்?

உச்சியில் பொட்டு, காலுக்கு மெட்டி ஏன்?

திருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் இட்டும், கால் விரலில் மெட்டியும் அணிகின்றனர். ஆரம்பகாலத்தில் திருமணமான ஆண்கள்தான் மெட்டியை அணிந்தனர். காலப்போக்கில் இப்பழக்கம் பெண்களுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்கள் தெருவில் செல்லும்போது தலை குனிந்து செல்வர். அப்போது எதிரே வரும் ஆண்களுக்கு, அவளது உச்சிநெற்றி நன்கு தெரியும். அதில், வகிடுப்பொட்டு இருந்தால் திருமணமானவள் என்பதை புரிந்துகொண்டு விலகிச்செல்வர். அதேசமயம் திருமணமான ஆண்கள் கால்விரலில் மெட்டி அணிந்து செல்லும்போது, பெண்கள் அவர்களது மெட்டியைக்கண்டு, அவனை எதிர்நோக்காமல் விலகிச் செல்வர். இவ்வாறு ஆணோ, பெண்ணோ திருமணம் ஆனவர்களா என்பதை உணர்த்துவதற்கான அடையாளமாகவே இவை அமைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !