தமிழக கோவில்களில் புத்தொளி பயிற்சி துவக்கம்!
சேலம்: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறப்பு நிலை கோவில்களில், நேற்று, புத்தொளி பயிற்சி துவங்கியது. தமிழகத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், மொத்தம், 38,481 கோவில்களில் பணியாற்றும் புரோகிதர்கள் பயன்பெறும் வகையில், புத்தொளி பயிற்சி வழங்க, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைவம், வைணவம் ஆகிய பிரிவுகளுக்கு, தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதற்காக, மாவட்டந் தோறும் இரண்டு சிறப்பு புரோகிதர்கள் தலைமையில், புத்தொளி பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிறப்பு நிலை கோவில்களில், நேற்று துவங்கிய இந்த பயிற்சி, 45 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில், கோவில்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, பூஜை உள்ளிட்டவைகள், புரோகிதர்களுக்கு விளக்கப்படுகிறது. இந்த பயிற்சியை நடத்துபவர்களுக்கும், கலந்து கொள்பவர்களுக்கும், சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.