திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா: ஜன.31ல் கொடியேற்றம்!
ADDED :4306 days ago
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.31) தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்.9ம் தேதி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பத்து நாள்கள் கொண்டாடப்படும் இந்த விழாவினை முன்னிட்டு தினமும் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி காலையில் தங்கச்சப்பரத்திலும், மாலையில் மயில்வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், புஷ்ப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.