ஏசுநாதர் படத்துடன் ஏழுமலையான் தரிசனம்!
ADDED :4304 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஏசு கிறிஸ்து படத்துடன் சென்ற, இலங்கை அமைச்சரின் உதவியாளரை, தேவஸ்தான அதிகாரிகள் அனுமதித்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில், இலங்கை, மக்கள் தொடர்பு மற்றும் பொது நிர்வாகத் துறை அமைச்சர், மெர்வின் சில்வா, தன் உதவியாளருடன் கோவிலுக்குள் நுழைந்தார். அமைச்சர் உதவியாளரின் சட்டை பையில், ஏசு கிறிஸ்து படம் இருந்தது. அதை கண்ட செய்தியாளர்கள், தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவித்த போது, அதிகாரிகள், கண்டு கொள்ள வேண்டாம் என்றனர். திருமலையில், அன்னிய மத பிரசாரம் தடைசெய்யப்பட்டுள்ளது: அது போல், வழிபாட்டு சின்னங்களுக்கும் தடை உள்ளது.