விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4427 days ago
விருத்தாசலம்: அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தை அமாவாசையொட்டி, விருத்தாசலம் சந்தைப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில், அதிகாலை விநாயகர், அங்காள பரமேஸ்வரி, புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் குறத்தி அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பிரகா உலா, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.