உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் நூபுர கங்கையில் புனித நீராடல்!

அழகர்கோவில் நூபுர கங்கையில் புனித நீராடல்!

அழகர்கோவில்: தை அமாவாசையையொட்டி அழகர்கோவில் மலை மீதுள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் ஏராளமானோர் புனித நீராடி தரிசனம் செய்தனர். ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் இங்கு பக்தர்கள் நீராடுவது வழக்கம். நேற்று காலை நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராட ஏராளமானோர் அதிகாலையில் குவிந்தனர். பக்தர்கள் மலைக்கு செல்ல கோயில் நிர்வாகம் மலைப் பாதையை அதிகாலை திறந்து, பஸ் போக்குவரத்தை துவக்கியது.தீர்த்தத்தொட்டி மீதுஉள்ள ராக்காயி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகள் நடந்தன. கூட்டம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, அம்மனை தரிசித்தனர்.மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் மூலவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி கவசம், வைர வேல் சாத்தப்பட்டது. உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பகலில் சுவாமி புறப்பாடு நடந்தது. அடிவாரத்திலுள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !