முத்தத்திரன் கோவிலில் தை அமாவாசை விழா
ADDED :4276 days ago
பென்னாகரம்: சந்தன மரக்கடத்தல் வீரப்பன் வழிபட்ட, நெருப்பூர் முத்தத்திரன் கோவிலில், நேற்று தை அமாவாசை திருவிழா நடந்தது. பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் முத்தத்திரன் கோவிலில், ஆண்டுதோறும் தை அமவாசை திருவிழா வெகுசிறப்பாக நடந்து வருகிறது. இக்கோவிலில் நடக்கும் விழாக்களில், சந்தன மரக்கடத்தல் வீரப்பன் பங்கேற்று, முத்தத்திரன் ஸ்வாமியை வழிபட்டு செல்வது வழக்கம். தை அமவாசையை முன்னிட்டு, நேற்று, இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், நெருப்பூர், ஏரியூர், பென்னாகரம், மேச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தங்களது நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.