விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு!
ADDED :4274 days ago
திருவாரூர்: தை அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலம். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.