சிவன்மலையில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு!
ADDED :4274 days ago
காங்கயம்: சிவன்மலையில் தை அமாவாசையையொட்டி சுப்ரமணிய சாமி கோயிலில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான மக்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் எளிதில் மலையேறி சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.