பெருமாள் கோவிலில் 6ம் தேதி ரதசப்தமி
ADDED :4268 days ago
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடக்கிறது.விழாவையொட்டி 6ம் தேதி காலை சுவாமிக்கு சூரிய பிரபை அலங்காரமும், 9 மணிக்கு அனுமந்த வாகனம், 10:30 மணிக்கு சேஷ வாகனம், பகல் 12:30 மணிக்கு கருட வாகன சேவை, மாலை 4:00 மணிக்கு யானை வாகனம், 5:30 மணிக்கு கற்பக விருட்சம் வாகன அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி உலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் கவியரசு, அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் மற்றும் திருமஞ்சன கமிட்டியினர் செய்து வருகின்றனர்.