உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் கோவில் கோபுரம் கட்ட... அறநிலையத்துறை நடவடிக்கை தேவை!

நல்லாத்தூர் கோவில் கோபுரம் கட்ட... அறநிலையத்துறை நடவடிக்கை தேவை!

சின்னசேலம்:சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் கோபுரம் கட்ட அற நிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் என எதிர்பார்க்கின்றனர்.சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் மாரியம்மன் கோவில் உள்ளது. சேலம் மாவட்டம் புதுப்பட்டில் இருந்து இங்கு வந்ததால் புதுப்பட்டு மாரியம்மன் கோவில் என அழைக்கின்றனர். கோவில் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்தது. கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. விழுப்புரம், சேலம், கடலூர், திருவண்ணாமøல் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோபுரம் கட்டும் பணி: கோவிலின் கோபுரத்தை கட்டும் பணியை சில முக்கிய பிரமுகர்கள் துவங்கினர். ஆனால் பணி நின்று 6 ஆண்டுகளாகியும் மீண்டும் துவக்கவில்லை. வருமானம் இருந்தும் கோவிலின் கோபுரம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கவில்லை. தற்காலிக தேர்:மாரியம்மன் கோவிலில் திருவிழா காலங்களில் பயன்படுத்த பெரிய தேர் உள்ளது. இது சேதமானதால் 6 ஆண்டுகளாக திருவிழா காலங்களில் தற்காலிக தேரில் சுவாமி வலம் வருகிறது. ஆறு ஆண்டுகளாக தேர் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிற்பதால் கரையான் அரித்துள்ளது. சில ஆண்டுகளில் தேர் முழுவதும் சேதடைந்து விடும். சம்பளம்கோவிலில் பூஜை செய்யும் குருக்கள் ராஜேந்திரனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் உள் ளது. அம்மனுக்கு பூஜை செய்வதற்கு பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமபட்டு வருகிறார்.அறநிலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகிகள் சேர்ந்து கோபுரம் கட்டவும், புதிய தேர் செய்வதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தேர் திருவிழா: ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இறுதி புதன்கிழமையும், சித்திரை மாதத்தில் முதல் புதன் கிழமை தேர் திருவிழா நடக்கும். திருவிழா காலங்களில் அரசு சார்பில் பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆண்டு தோறும் பக்தர்கள் 5-6 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வழங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !