மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற பிரார்த்தனை
ADDED :4270 days ago
தேனி: தேனி வேதபுரி ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தஷிணாமூர்த்தி வித்யாபீடத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை நடந்தது.பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மகா ஸ்வாமிகள் தலைமையில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்த இந்த பூஜையில், மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு, வீட்டில் தினமும் பிரார்த்தனையின் போது படிக்க, சரஸ்வதி, விநாயகர் மந்திரம் அடங்கிய அட்டைகள் வழங்கப்பட்டன. ரக்ஷா கயிறும், பேனா வழங்கப்பட்டது. அன்னதான மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.