காளையார் கோவிலில் அருளானந்தர்ஆலய தேர் பவனி
காளையார்கோவில்: காளையார் கோவிலில், புனித அருளானந்தர் ஆலய தேர்பவனி நடந்தது. கடந்த 24ம் தேதி, புனித அருளானந்தர் ஆலய திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திரு செபமாலை, நவநாள் திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் புனித அருளானந்தர் ஆலயத்தில், தேர் பவனி நடந்தது. புனித அருளானந்தர் மின்ஒளி அலங்காரத்தில் வலம் வந்தார். சிவகங்கை தொழிலாளர் பணிக்குழு செயலாளர் அமல்ராஜ், தேர் பவனி மறையுரை ஆற்றினார். பாதிரியார் அந்தோணி பாக்கியம் தலைமையில், சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. பங்கு பாதிரியார் அற்புதஅரசு தலைமையில், குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர். போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்கம்திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஆ.பி.,ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது. திருப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கபடி வளர்ச்சி கழக தலைவர் மனோகரன் வரவேற்றார். துணை தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் துவக்கி வைத்தார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன், உடற்கல்வி ஆய்வாளர் முருகப்பராஜா, தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி தலைவர் பெரியதம்பி, ஊராட்சி தலைவர் காந்திதாஸ் பங்கேற்றனர். இயக்குனர் கதிரேசன் நன்றி கூறினார்.