விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :4272 days ago
திண்டிவனம் : திண்டிவனம் இஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டிவனம் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளால் ஸ்தாபிக்கபட்ட இஷ்ட சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு மற்றும் வண்ணகலாப திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை செல்லப்பா குருக்கள், சாமிநாதன், சபரி குருக்கள் குழுவினர் செய்தனர். விழாவில் புதுச்சேரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கனகராஜன் மற்றும் அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.