ரெணபலி முருகன் கோயில் மாசி விழா இன்று துவக்கம்!
ADDED :4269 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயில் மாசி மக திருவிழா இன்று(பிப்.4) துவங்குகிறது. பிப்.5ல், இரவு காப்பு கட்டுதல், மறுநாள் 6ம் தேதி முதல் தினமும் இரவு அன்னம், மேஷம், பூத, கைலாச, யானை, மயில் என பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்.15ல், காலை 10.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பிப்.16ல், விழா நிறைவடைகிறது.