பெருமாள் கோவிலில் சமபந்தி போஜனம்
ADDED :4314 days ago
கள்ளக்குறிச்சி: அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெரு மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி போஜனம் நடந்தது. ஆர்.டி.ஓ., குணசேகர், அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, நகர சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர், அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் தமிழரசி, வி.ஏ.ஓ., முகமது கவுஸ், அரசு வழக்கறிஞர் சீனுவாசன், கூட்டுறவு வங்கி தலைவர் ரங்கன், சி.எம்.எஸ்., தலைவர் பச்சையாப்பிள்ளை, துணைத்தலைவர் கோபி, அ.தி. மு.க., கட்சியினர் குபேந்திரன், அப்துல்கரீம், செல்வராஜ், இன்ஜினியர் சீனிவாசன், செந்தில், கவுன்சிலர்கள் முருகன், குட்டி பங்கேற்றனர்.