கோயிலுக்கு திரும்பியது யானை!
ADDED :4364 days ago
அழகர்கோவில்: கோயில் யானைகளுக்கு டிச.,12 முதல் நேற்றுமுன்தினம் வரை மேட்டுப்பாளையம் தேத்தம்பட்டியில் புத்துணர்வு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் யானை சுந்தரவல்லி, 300 கிலோ எடை அதிகரித்து நேற்று கோயிலுக்கு திரும்பியது. நிர்வாக அதிகாரி வரதராஜன் தலைமையில் மேள, தாளம் முழங்க வரவேற்றனர். பக்தர்கள் திருஷ்டி சுற்றி கோயிலுக்கு அழைத்து சென்றனர்.