உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய துறையில் புதிய ஊதியம் வேண்டுமாம்!

அறநிலைய துறையில் புதிய ஊதியம் வேண்டுமாம்!

சென்னை: அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களின் வருவாயில், 40 சதவீதத்தில் மட்டுமே, கோவிலின் சிப்பந்திகளின் சம்பளம் மற்றும் இதர செலவினங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து, புதிய ஊதியம் நிர்ணயம் செய்யக்கோரி, திருக்கோவில் பணியாளர் சங்கம் சார்பில், திருச்சியில், அடுத்த மாதம், மாநாடு நடக்க உள்ளது.

சங்கத்தின் இதர கோரிக்கைகள்: ஆதீனம், புறம்போக்கு இடங்களில் வசிக்கும், கோவில் பணியாளர்களுக்கு, பசுமை வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட நிதி வழங்க வேண்டும். கோவில்களை நிர்வகிக்க, அரசால் நியமிக்கப்பட்ட குழுவில், அலுவலகம் சார்ந்த உறுப்பினர்களாக, கோவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு வசதி திட்டத்தில், கோவில்களில் பணிபுரியும், அனைத்து பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். அர்ச்சகர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !