உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் ஏழுமலையான் கோவில்?

மும்பையில் ஏழுமலையான் கோவில்?

திருப்பதி: மும்பையில், ஏழுமலை யான் கோவில் கட்ட, மகாராஷ்டிர மாநில அரசிடம் நிலத்தை பெற, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மும்பையில், திருமலை ஏழுமலையான் கோவில் மற்றும் விசாரணை மையத்தை, தன் சொந்த நிலத்தில் அமைக்க முடிவு செய்தது. ஆனால், தனியார் நிலங்களின் மதிப்பு அதிகமாக உள்ளதால், அரசின் நிலத்தையே குத்தகைக்கு பெற்று, கோவில் கட்ட முடிவு செய்து, அதற்கான நில சேகரிப்பில் தேவஸ் தானம் ஈடுபட்டுள்ளதாக, தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி, போலா பாஸ்கர் தெரிவித்தார். மேலும், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில், காலியாக உள்ள, 0.71 சென்ட் நிலத்தை, கோவில் கட்டுவதற்காக, மும்பை அரசிடம், தேவஸ்தானம் கேட்டுள்ளது. மேலும், கோல்ப் கோர்ட் அருகில் உள்ள, 2 ஏக்கர் நிலத்தையும் தேவஸ்தானம் கேட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !