உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்ரீகர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்!

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு இலவச இன்சூரன்ஸ்!

ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் ம் பனி லிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை இந்தாண்டு ஜூன் மாதம் 28-ல் துவங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி முடிகிறது. இதற்கான முன் பதிவு வரும் மார்ச் 1-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் யாத்திரைக்கு செல்ல பதிவு செய்யும் பக்தர்களுக்கு ரூ. 1 லட்சம் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சான்றிதழ் அளித்து உரிய முறையில் பதிவு செய்து அதற்கான அட்டை வைத்திருக்கும் யாத்ரீகர்கள் பயணத்தின் போது ஏதேனும் விபத்தில் மரணமடைய நேரிட்டால் ரூ. 1 லட்சம் காப்பீட்டு தொகையாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும். இந்த இலவச காப்பீட்டு திட்டம், புனித யாத்திரை முடிவடையும் வரை செல்லுபடியாகும். இதனை அமர்நாத் யாத்திரை வாரிய அறங்காவலரும், காஷ்மீர் மாநில கவர்னருமான என்.என். வோரா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !