ஸ்ரீவி., திரும்பிய ஆண்டாள் கோயில் யானை
ADDED :4261 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் யானை, முதுமலை புத்துணர்வு முகாமிலிருந்து, நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து சேர்ந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, 8, முதுமலை புத்துணர்வு முகாமிற்கு, டிச.18ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. 48 நாட்களுக்குப் பின்னர், நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தது. திருமுக்குளம் தீர்த்தவாரி மண்டபத்தில் இறங்கி பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இணை ஆணையாளர் தனபால், செயல் அலுவலர் ராமராஜா, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.