ராஜபாளையம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4261 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மாதாங்கோவில் தெரு, அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்., 12 காலை 9 முதல் 10 மணிக்குள் நடக்கிறது.பிப்.,9 மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. பிப்., 10ல் காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரவு 8.15 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பிப்., 11ல் காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பிப்.,12 காலை 9 முதல் காலை 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2வது நிர்வாக ஸ்தானீதம் கற்பூரபட்டர் (எ) ஆனந்த்பட்டர் தலைமையில் நிகழ்ச்சி நடக்கிறது.