உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குன்றம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

செங்குன்றம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

செங்குன்றம் : செங்குன்றம் அருகே, பாயசம்பாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட, பாயசம்பாக்கம் கிராமத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், ஸ்ரீ தேவி முத்துமாரியம்மன், கெங்கையம்மனுக்கு புனாரவர்த்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது.
புள்ளிலைன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாலையில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !