கொண்டங்கியில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்திலுள்ள சித்தி விநாயகர், பிடாரி சன்னியம்மன், துர்காதேவி, அங்காளபரமேஸ்வரி, மாரியம்மன் மற்றும் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன் தினம் (10ம் தேதி) மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோபூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை மூன்றாம் கால யாகபூஜை நடந்தது. இதனை தொடர்ந்து இன்று (12ம் தேதி) காலை நான்காம் கால யாகபூஜையும், நாடி சந்தானம் மற்றும் தீபாராதனை கடம் புறப்பாடும் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்கும் சித்தி விநாயகர், சன்னியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 13ம் தேதி முதல் மண்டல பூஜைகள் துவங்குகின்றன.