வீரராகவப் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :4295 days ago
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன.உதவி ஆணையர்கள் ஆனந்த், ஜீவானந்தம், செயல் அலுவலர் சிவராமசூரியன், ஆய்வர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியலில், 7 லட்சத்து 50 ஆயிரத்து 634 ரூபாய், 33.90 கிராம் தங்கம், 85.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. வீரராகவப் பெருமாள் கோவில் உண்டி யல்களில், 5 லட்சத்து 89 ஆயிரத்து 385 ரூபாய் பணம், 35.500 கிராம் தங்கம், 39.500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன.