மங்களூர் மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :4295 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மங்களூர் மாரியம்மன் கோவிலில், தை மாத உற்சவத்தையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது.இதனையொட்டி, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் சுமங்கலி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு படையலிட்டனர்.