யோக லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4296 days ago
காஞ்சிபுரம்: யோக லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூன்று சன்னிதி களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம், சர்வ தீர்த்தகுளத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள யோக லிங்கேஸ்வரர் கோவிலில், சர்வமங்கள விநாயகர், வீர ஆஞ்சனேயர் மற்றும் அனுமந்தீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. இந்த மூன்று சன்னிதிகளின் கும்பாபிஷேகத்திற்காக, கடந்த, 10ம் தேதி கணபதி ஹோமம் துவங்கியது. அதன், மூன்றாம் நாளான நேற்று, காலை, 9:45 மணிக்கு, மூன்று சன்னிதிகளின் விமான கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.