உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில்அறங்காவலர் குழு நியமனம்

திரவுபதியம்மன் கோவில்அறங்காவலர் குழு நியமனம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய அறங்காவலர் குழுவினை இந்து அறநிலைய துறை தேர்வு செய்துள்ளது.புதிய தலைவாக ராமதாஸ், செயலாளராக செல்வகணபதி, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளராக நேத்தாஜி, துணைத் தலைவராக சேகர், உறுப்பினராக கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான, இந்திய அறநிலையை துறையின் அரசாணையை முதல்வர் ரங்கசாமி புதிய பொறுப்பாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மணி, கோபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !