கன்னிமார், கருப்பண சாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4292 days ago
குஜிலியம்பாறை:கூம்பூர் பெரியகுளத்து கரையில் உள்ள கன்னிமார், கருப்பண சாமி கோயிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. தீர்த்தம் செல்லுதல், விநாயகர் பூஜை, தீபாராதனை, முதற்கால பூஜைகள் நடந்தன. கண் திறப்பு நிகழ்சியை தொடர்ந்து கன்னிமார் மற்றும் கருப்பணசாமி சிலைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை பாபு சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான மக்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.