உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டம்

வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விழாக்களில், வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டமும் ஒன்று. நான்கு நாட்கள் நடக்கும் தேரோட்டத்தின், கடைசி நாளன்று விழாவை காண தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நேற்று, 2வது நாள் தேரோட்டம் நடந்தது. இதில், கலெக்டர் நந்தகோபால், வேலூர் கிழக்கு புற நகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அப்பு உள்பட பலர் பங்கேற்றனர். வேலூர், வாலாஜா பேட்டை, சோளிங்கர், திருத்தணி, குடியாத்தம், ஆற்காடு, பொன்னை, சித்தூர், சென்னை, பெங்களுர் பகுதிகளுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !