வெங்கடாஜலபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :4361 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாஜலபதி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவில் முனியப்பன் குடும்பத்தினரால் கனகவல்லி நாயிகா சமேத வெங்கடாஜலபதி @காவில் 30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. நேற்று காலை கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி வேதபாராயணம், மகாசாந்தி ஹோமம், திருவாராதனம் பூஜைகள் நடந்தன. காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.விழா ஏற்பாடுகளை முனியப்பன், சத்தியமூர்த்தி, ராஜசேகர் செய்திருந்தனர். சங்கராபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.