கொண்டங்கியில் கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் கும்பாபி@ஷகம் நடந்தது.இங்குள்ள சித்தி விநாயகர், சன்னியம்மன், துர்காதேவி, அங்காளபரமேஸ்வரி, மாரியம்மன் மற்றும் அய்யப்பன் கோவில்களுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மகாபூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் கடம்புறப்பாடு நடந்தது. சித்தி விநாயகர், சன்னியம்மன், அங்காளபரமேஸ்வரி, மாரியம்மன், துர்காதேவி மற்றும் அய்யப்பன் கோவில்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதில் சுப்ரமணி குருக்கள், கணேச குருக்கள், யோகேஸ்வரன் மற்றும் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்டாச்சிபுரம் கண்டாச்சிபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.கண்டாச்சிபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை 10மணியளவில் நடந்தது. கோ பூஜை, இரண்டாம்கால வேள்வி பூஜைகள் நடந்தன. மாரியம்மனுக்கும், கோபுர கலசத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.