பிரதோஷ பூஜை பக்தர்கள் வழிபாடு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சொர்ணபுரீஸ்வரர், நந்தி சிலைக்கு, பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம், தேன் என, 16 வகையான அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, 6 மணியளவில், சொர்ணபுரீஸ்வரர், நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, சேலம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.